- by Editor
- 2 years ago
இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
-
- by Editor,
- 11 months ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாகப் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் 36 சிறைச்சாலைகள் உள்ளன. அவற்றில் அடைக்கக்கூடிய சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 10,500 ஆகும்.
ஆனால் தற்போது கிட்டத்தட்ட 36,000 பேர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.