Tuesday, October 6, 2026

இலங்கைக்கு அடுத்த வாரம் வருகை தரும் IMF பிரதிநிதிகள் குழு


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் முன்னெடுக்கப்படும் ஏழாவது மறுஆய்வு தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழுவினர் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

இதன்படி, IMF பிரதிநிதிகள் செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து, மறுஆய்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின்போது இலங்கையின் சமீபத்திய பொருளாதார முன்னேற்றங்கள், நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் நீண்டகாலமாக நிலவும் கட்டமைப்பு ரீதியான பொருளாதார சவால்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

you may also like