- by Editor
- 1 year ago
இலங்கைக்கான நேபாளத் தூதுவர் - பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!
இலங்கைக்கான நேபாளத் தூதுவர் - பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான நேபாளத் தூதுவர் பூர்ணா பகதூருக்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பின் போது, பிரதமர் நேபாளத் தூதுவரை வரவேற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இலங்கையின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும் கலந்துரையாடலில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், முக்கியமான விடயமாக இலங்கையில் வசிக்கும் நேபாள நாட்டினர் எதிர்கொள்ளும் விசா தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் பிரதமர் உட்பட அலுவலகத்தின் மேலதிக சிரேஷ்ட அரச அதிகாரிகளும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.