Monday, October 12, 2026

இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை: மன்னார் மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு


இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மன்னார் - பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது, கடமையில் இருந்த இரு இராணுவத்தினர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று அந்த இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிகால் தீர்ப்பளித்துள்ளார்.

முருங்கன் பொலிஸாரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நேற்றைய வழக்கு விசாரணையின் போது, குற்றவாளியைக் போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


you may also like