- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (28.09.2024)
-
- by Editor,
- 2 years ago
- in இரகசியம் பரகசியம்
பொதுக் கட்டமைப்புக்காரர்கள் சங்கு, சக்கரம், எதில் போட்டியிடுவது என்றெல்லாம் பிகு பண்ணிக் பண்ணிக் கொண்டிருக்க, சங்கைத் தனது சின்னமாக மாற்றுவதற்கு குத்துவிளக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்து விட்டது என்று தெரிகிறது.
இலங்கைத் தேர்தல் சட்டங்களின்படி ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டு 7 நாள்களுக்குள் ஒரு கட்சி தனது சின்னத்தை மாற்ற விண்ணப்பித்தால் அதற்கு தேர்தல் ஆணையம் இடமளிக்கும்.
சங்குச் சின்னத்தில் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதா என்று பொதுக் கட்டமைப்பின் அங்கத்தவர்களான பொது அமைப்பின் பிரதிநிதிகள் தங்களுக்குள் குழம்பியடித்து இடறப்பட்டுக் கொண்டிருக்க, குத்து விளக்குக் கூட்டணி தனது சின்னத்தை சங்காக மாற்றுவதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்திடம் கையளித்து விட்டதாகத் தெரிகிறது
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் குத்துவிளக்கு கூட்டணியும் உட்பட்ட பொதுக் கட்டமைப்பினர் சங்குச் சின்னத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்தி, அந்தச் சின்னத்தைப் 'பொப்பிலராக்க', அந்தப் பொதுக் கட்டமைப்பின் இணக்கமின்றியே அந்த சங்குச் சின்னத்தை, குத்துவிளக்கு@ கூட்டணி சுவீரிக்க போகின்றது. இனி அது குத்துவிளக்குக் கூட்டணியே அல்ல. சங்க கூட்டணி தான்.
***
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய மத்திய குழுக் கூட்டம் இன்று வவுனியாவில்..
விடயங்கள், கலவரங்கள், மீளக் கலவரங்கள் ஏற்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தார்.
***
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் Bar பொமிட் எடுத்தார் எனச் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பிய 7 பேர் மீது அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும், ஒட்டிசுட்டான் Cyber Crime பிரிவிலும், கொழும்பில் இருக்கும் Cyber Crime இன் தலமையிடத்திலும் முறைப்பாடு செய்திருக்கிறார்.
நேற்றைய தினம் 7 பேரில் ஒருவரை பொலிஸ் அழைத்து விசாரித்ததில் அந்த நபர் தான் பதிவிட்ட கருத்துக்கு ஆதாரம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, தன்னை மன்னித்து விடும்படி கேட்டிருக்கிறார். ஆனால் அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரோ இது விடயத்தில் முழுமையான சட்ட நடவடிக்கை எடுத்த பின்னரே விடயத்தை முடிவுறுத்தலாம் என்பதில் உறுதியாக இருக்கிறார் எனத் தெரிகிறது.
***