- by Editor
- 4 months ago
இரகசியம் - பரகசியம் (13.02.2024)
சிலரிடம் ஒரு பழக்கம் உண்டு. வினையை விலைக்குத் தேடி வாங்குவார்கள்.
தேவையில்லாமல் அதிகப்பிரசங்கித்தனம் பண்ணி, பிரச்சினையைத் தேடி வாங்குபவர்களை என்னவென்று சொல்வது..? அதற்கு ஓர் உதாரணம் இது.
பாடசாலைகள் விடுமுறைக்குப் பின்னர், (கடந்த ஆண்டுக்கான) 3ஆம் தவணைப் பரீடசை தற்போதுதான் இடம்பெறுகின்றது.
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் மாகாண மட்டத்தில் பரீட்சை வினாத்தாள்களைத் தயாரித்து பாடசாலைகளுக்கு வழங்கி வருகின்றது.
இதில் அடுத்த மே மாதம் க.பொ.த சாதாரணப் பரீட்சை எழுத வேண்டிய தரம்11 மாணவர்களுக்கும் பரீட்சை இடம்பெறுகின்றது.
இதிலே தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்திற்கான பரீட்சை வினாத்தாளைத் தயாரித்த ஒருவர் அதில் தனது வித்துவத்தை - கைவரிசையை - காட்டப் புறப்பட்டடு தற்போது கல்வித் திணைக்களம், அரசியல் தரப்புகள், புலனாய்வுப் பிரிவு என சகலரின் கழுகுப் பார்வையிலும் விழுந்திருக்கின்றார்.
இந்தப் பாடத்திற்கான ஒரு கேள்வி பின்வருமாறு அமைந்துள்ளது:-
'ஒரு நாடு இருதேசம்' எனத் தமிழர்கள் முழங்கினர். இவ்வாக்கியம் 1.தனிவாக்கியம் 2. கலப்பு வாக்கியம்
3. தொடர்வாக்கியம் 4. கூட்டு வாக்கியம்
- இதுதான் வினாவாகும்.
இதற்கு விடை என்னவோ கலப்பு வாக்கியம்தான். ஆனால் இந்த வினாவைத் தயாரித்தவர் தொடர்பான தகவல் இனி வரும் நாள்களில் க(லைப்பு வாக்கியமாக வந்து முடியாவிட்டால் சரி.....!