Saturday, October 10, 2026

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை


இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, சரண குணவர்தனவுக்கு 6 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளின் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில், அவரை ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவித்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், அந்த நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டபோது அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதன் மூலம் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கருதி, 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 6 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

you may also like