- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (05.02.2024)
பத்து நாள்களுக்கு முன்னர் திருகோணமலையில் நடந்து முடிந்த இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் தொடர்பில் இன்னும் சர்ச்சைகள் தொடர்கின்றன. அடுத்து என்ன என்பது குறித்து குழப்ப நிலைமை நீடிக்கின்றது.
அது குறித்து விரிவான பல தகவல்கள் அடங்கிய செவ்வியொன்றை வழங்கி இருக்கின்றார் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.
'தமிழன்' பத்திரிகையின் ஆசிரியரும் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளருமான ஆர்.சிவராஜா தமது பத்திரிகை 'நெற்றிக்கண்' என்ற பெயரில் ஆரம்பித்துள்ள செவ்வித் தொடரில் முதலாவதாக அந்தப் பேட்டியை அமைத்திருக்கின்றார்.
தமிழரசுக் கட்சியின் நடந்து முடிந்த மத்திய குழு, பொதுக்குழுக் கூட்டங்கள், இனிமேல் நிலைமை என்ன என்பவை தொடர்பில் பல்வேறு சுவாரசியமான அம்சங்கள் அந்தச் செவியில் வெளிப்படுகின்றமையால் அதன் இணைப்பை இங்கு தந்துள்ளேன்.
'தமிழன்' பத்திரிகைக்கும் அதன் ஆசிரியர் சிவராஜாவுக்கும் விநயமான நன்றியுடன் அதனை இங்கு இடம் இடம்பெறச் செய்திருக்கிறேன். கீழே இருக்கும் இணைப்பை அழுத்துவதன் மூலம் அந்தச் செவ்வியை நீங்கள் முழுமையாக செவிமடுக்க முடியும்.
அது நீண்ட செவ்வி என்பதால் இன்று என் கருத்தைப் புதிதாக தெரிவிக்காமல், அந்த விடயங்களை இன்றைய தினத்திற்கான - வாசகர்களுக்கு உரிய - தகவலாக முன்னிறுத்தி நிறுத்திக் கொள்கிறேன்.