- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (04.11.2024)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
நேற்று நுவரெலியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க ஒரு விடயத்தை அங்கு வெளிப்படுத்தினார்.
பதவியிலிருந்த ஜனாதிபதியின் உணவு தேவைக்காக நுவரெலியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து அங்கு உற்பத்தியான சேதன மரக்கறி வகைகள் கொழும்புக்கு கொண்டுவரப்படுகின்றன என்ற தவல்சியே அவர் கூறினார்.
சுமார் அறுபது கிலோ நிறையுடைய இரண்டு பொதிகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நுவரெலியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் விளைவிக்கப்பட்ட சேதன மரக்கறிகள் கொழும்புக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு வருவதை அறிந்து தாம் ஆச்சரியமடைந்தார் என்ச் அவர் கூறினார்.
அந்த மரக்கறிகளை இனிமேல் பாதுகாப்பு அதிகாரிகளின் தேவைக்கு பயன்படுத்தும்படி தான் உத்தரவிட்டிருக்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு உற்பத்தியாகும் பொது மரக்கறி வகைகளைத் தமது தேவைக்கு பயன்படுத்த விரும்பாத வகையில் விசேட வசதிகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள், தேர்தல்களில் தாம் தோற்ற பின்னரும் அந்த வசதிகளையும் வாய்ப்புகளையும் தொடர்ந்து பெற எதிர்பார்க்கின்றார்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
***
கொழும்பில் இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில் தம்மிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தப் பொதுத் தேர்தலில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படாவிட்டால் துன்ஹிந்த - பதுளை வீதியில் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் தலை குப்புறக் கவிழ்ந்தமை போல நாடும் கவிழ நேரும் என்று எச்சரித்திருக்கின்றார்.
கடந்த 75 ஆண்டுகளாக நன்கு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் மூலம் நிர்வகிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதல பாதாளத்தில் விழுந்து தலைகுப்புறக் கவிழ்ந்து போனது என்பதை அவர் மறந்து விட்டு பேசுகின்றார் என்றுதான் தோன்றியது.