- by Editor
- 2 months ago
இரகசியம் - பரகசியம் (04.10.2024)
-
- by Editor,
- 2 years ago
- in இரகசியம் பரகசியம்
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று மாலை சந்தித்து விரிவாகப் பேசியிதுக்கின்றார்.
அச்சமயம் மதுபான சாலைகளுக்கான பெர்மிட்டுகள் முன்னைய ரணில் அரசின் கீழ் முறைகேடான முறையில் வழங்கப்பட்டமை குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
அந்த பெர்மிட்டுகள் யாருடைய சிபாரிசுகளில் வழங்கப்பட்டன என்ற விவகாரத்தை புதிய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், காலம் தாமதிக்க, தாமதிக்க இந்த விடயத்தில் தற்போதைய அரசுத் தரப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் மக்களுக்கு வலுக்கும் என்றும் சுமந்திரன் கூறியிருக்கின்றார்.
மேற்படி பெர்மிட்டுகள் யாருடைய பெயரில் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரம்தான் இப்போது முழுமையாக உள்ளது, எந்த அரசியல்வாதியின் சிபாரிசில் அவை வழங்கப்பட்டன என்பதை பற்றிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்காக புலனாய்வு அடிப்படையில் தேடப்படுகின்றன என்று ஜனாதிபதி பதிலளித்திருக்கின்றார்.
பெரும்பாலான பெர்மிட்டுகள் வடக்கு பகுதிக்கு வழங்கப்பட்டிருப்பதால் அது யாருடைய பெயரில் வழங்கப்பட்டுள்ளது என்பதை உத்தியோகபூர்வமாக வெளியிடுங்கள், அதை யார் சிபாரிசு செய்தார்கள் என்பதை எமது மக்கள் கண்டுபிடிப்பார்கள். அவ்வளவு துல்லியமாகக் கண்டுபிடிக்கக் கூடியவர்கள் என்று சுமந்திரன் ஜனாதிபதியிடம் கூறியிருக்கிறார்.
புலனாய்வுத் தரப்பினரை விட இந்த விடயத்தில் வடக்கு மக்கள் மிகவும் 'ஷார்ப்' என்ற சுமந்திரனின் கருத்தை ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க விசேடமாக கவனத்தில் எடுத்து புன்னகைத்தார் எனத்தெரிய வந்தது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழர்களின் அபகரிக்கப்பட்ட - ஆக்கிரமிக்கப்பட்ட - காணிகளை விடுவித்தல் ஆகியவற்றில் அரசு உறுதியாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு இந்த விடயங்கள் முடிவுக்கு வரும் வகையில் தீர்வு காணப்படும் என்று சுமந்திரனிடம் உறுதி அளித்திருக்கிறார் ஜனாதிபதி.
கிழக்கில் மேய்ச்சல் தரைப் பிரச்சினை, கிழக்கு மாகாண பூர்வீக நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் சூறையாடப்படுவது தொடர்பான விவகாரம், கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் சம்பந்தமான சர்ச்சை போன்றவற்றுக்கெல்லாம் புதிய அரசு நிறுவப்பட்டதுடன் தீர்வும் காணப்படும் என ஜனாதிபதி இந்தச் சந்திப்பின்போது உறுதி அளித்திருக்கிறார்.