Sunday, October 4, 2026

இன்று முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்!


இன்று முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பம்!

கண்டியில் ஆரம்பித்து நடைபெற்று வரும் எசல பெரஹராவை பார்வையிட செல்பவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (04) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு கோட்டை, பொல்கஹவெல, மாத்தளை மற்றும் நாவலப்பிட்டியவிலிருந்து இந்த புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like