Friday, October 9, 2026

இன்று முதல் தபால் மூல வாக்களிப்பு


ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகின்றது.

இதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்டச் செயலகங்கள், தேர்தல் செயலகங்கள், சிரேஷ்ட உதவி மற்றும் உதவி காவல்துறை அலுவலகங்கள், காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், காவல்துறை நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட காவல்துறை பிரிவுகள் என்பனவற்றிலும் தபால் மூல வாக்களிப்பைப் பதிவு செய்ய முடியும்.

அத்துடன், தபால் மூலம் வாக்களிப்பதற்கு 712,321 அரச ஊழியர்கள் தகுதிபெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

you may also like