- by Editor
- 6 months ago
இன்றி நள்ளிரவு முதல் தேநீர், பால் தேநீர் விலை குறைப்பு
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாவால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை குறைப்பு தொடர்பான தீர்மானம், எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் உணவகத் துறையில் ஏற்படும் செலவுக் குறைப்பை நுகர்வோருக்கும் வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூலப்பொருட்களின் விலைகள் குறையும் தன்மைக்கு ஏற்ப எதிர்காலத்தில் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.