Tuesday, October 13, 2026

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்: சாதிக்குமா இந்தியாவின் இளம் படை!


இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்: சாதிக்குமா இந்தியாவின் இளம் படை!

இந்தியா டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், ரஹானே, புஜாரா, ஆகிய மூத்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில்,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் இளம்ரத்தங்கள் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி "லீட்சில்" இன்று தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மூத்த வீரர்களான கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகிய அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் இல்லாமல் இந்த முறை இங்கிலாந்தில் விளையாடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் மட்டும் அல்ல இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் இங்கிருந்து தொடங்குகிறது. கருண் நாயர் மீண்டும் 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

வளர்ந்து வரும் தமிழக வீரர்களான சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்தியா அணியின் அனுபவம் வாய்ந்த வீரார்களாக ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் மாத்திரமே காணப்படுகின்றார்கள்.

இந்திய அணியில் துடுப்பாட்ட வீரர் வரிசையில் ஜடேஜா, ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன்.கே.எல்.ராகுல், சுப்மன் கில், ரிஷப் பந்த், ஆகியோர் இருக்கிறார்கள். எனினும் பந்துவீச்சை பொறுத்தவரையில் இந்திய அணி மலைப்போல் நம்பியிருப்பது வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை மட்டும் தான். அதேவேளையில் இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று ஆரம்பமாகும் முதலாவது டெஸ்ட் போட்டி "லீட்ஸ் மைதானத்தில்" களம் காண உள்ள நிலையில், இந்திய அணி லீட்ஸ் மைதானத்தில் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகள் விளையாடி. அதில் 2-ல் வெற்றியும் 4-ல் தோல்வியும், ஒன்றில் சமநிலையாகவும் முடிந்துள்ளது.

இன்று ஆரம்பமாகும் போட்டியானது இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பாகவுள்ளது. குறிப்பாக மூத்த வீரர்கள் பலர் அணியில் இல்லாமல், இங்கிலாந்து மண்ணில் சாதிக்குமா? சுப்மன் கில் தலைமையிலான இந்திய இளம் படை.

you may also like