- by Editor
- 2 years ago
ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
-
- by Editor,
- 3 months ago
- in உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானின் ஹிந்து-குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு இன்று (27) மாலை 7.04 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஆப்கானிஸ்தானைத் தாண்டி அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் அச்சமடைந்து வீடுகள் மற்றும் கட்டடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
நிலைமையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், பாதிப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.