- by Editor
- 2 years ago
ஆப்கானிஸ்தானில் அனர்த்தம்; நில அதிர்வினால் 20 பேர் பலி
-
- by Editor,
- 11 months ago
- in உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் சுமார் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், சுமார் 320 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
நில அதிர்வினால் பல்க் மற்றும் சமங்கான் மாகாணங்களின் சில பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என தலிபான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆக பதிவான நில அதிர்வில் 2,200 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.