- by Editor
- 2 years ago
ஆக்ரா ஓயாவில் மூழ்கி 14 வயது மாணவன் மாயம்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் மூழ்கி 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றிருந்தபோது தவறி ஆக்ரா ஓயாவில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை, பொலிஸ் கடற்படை பிரிவின் நுவரெலியா அணியினரும் பிரதேச மக்களும் இணைந்து காணாமல் போன சிறுவனைத் தேடும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.