- by Editor
- 1 year ago
அவுஸ்திரேலியாவில் கத்திகுத்து: 16 வயது சிறுவன் சுட்டுக் கொலை
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
அவுஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
அந்த, சிறுவன் பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதை அறிந்ததும் பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த அந்த சிறுவன் கத்தியுடன் பொலிஸாரை நோக்கி வந்த நிலையில் அந்த சிறுவனை கத்தியைக் கீழே போடுமாறும் மற்றும் சரணடையுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதற்கு மறுத்த சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.