- by Editor
- 2 months ago
அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான நிகழ்நிலை காப்புச் சட்ட வழக்கு ஜூன் 19க்கு ஒத்திவைப்பு
-
- by Editor,
- 4 months ago
- in இலங்கை செய்திகள்
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு வைத்தியர் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், அவதூறு பரப்பும் நோக்கிலும் செய்திகள் மற்றும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு வைத்தியர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மற்றொரு வைத்தியர், ஒரு தனியார் ஊடகம் மற்றும் சில YouTube தளங்கள் உள்ளிட்ட தரப்புகள் எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணையின்போது எதிர்மனுதாரர் தரப்பின் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்கின் கட்டளையை வழங்குவதற்காக நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சார்பில் லக்சான் டயஸ் அவர்களின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா ஆஜராகியிருந்தார்.
அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.