Thursday, October 8, 2026

அரசு ஊழியர்களுக்கு நிதிக் கடன்கள் வழங்கப்படும் - அமைச்சர் சமரசிங்க கருத்து!


அரசு ஊழியர்களுக்கு நிதிக் கடன்கள் வழங்கப்படும் - அமைச்சர் சமரசிங்க கருத்து!

அரசு ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட அல்லது வீடுகளைப் புதுப்பிக்க நிதிக் கடன்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் வசந்த் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

- இது குறித்து அமைச்சர் சமரசிங்க தெரிவிக்கையில்,

இலங்கையில் வீட்டுவசதி பிரச்சினையை அடுத்த 05 முதல் 10 ஆண்டுகளுக்குள் தீர்க்க அரசாங்கம் பாடுபடுகின்றது. முந்தைய நிர்வாகங்களைப் போலல்லாமல், சரியான அமைப்பின் மூலம் பொருத்தமான நபர்கள் மட்டுமே இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

"முன்னாள் அரசாங்கம் வீட்டுவசதி விளம்பர பிரச்சாரங்களுக்காக மட்டும் 520 மில்லியன் ரூபாய்களை செலவிட்டது. இதுவும் பொதுமக்களின் பணம்தான்," என்று அவர் கூறினார்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கம் 140 பேருக்கு உதவி வழங்கி வருவதாகவும், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் நிதிக் கடன்கள் கிடைக்கும் என்றும், 80க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு ரூ. 01 மில்லியன் கடன்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like