Thursday, October 8, 2026

அயோத்தி ராமர் கோயில் திறப்பை தி.மு.க. அரசியல் ஆக்குகின்றது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சனம்


"முழுமையடையாத சட்டப்பேரவையை திறந்தவர்கள், ராமர் கோயில் திறப்பை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.”

- இவ்வாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில உதய நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில்,

'' உத்தரப் பிரேதசத்தில் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வை நாம் பார்த்தோம். ராமர் கோயிலில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இங்கு நடந்த உத்தரப் பிரதேச மாநில உதய நாள் நிகழ்வில் அதனை நினைவுகூர்ந்தனர்.

கருணாநிதி புதிய சட்டப்பேரவை கட்டடத்தை மன்மோகன் சிங்கை வைத்து திறந்தார். அப்போது அதற்கு கூரையே போடவில்லை. ஷெட் அமைத்து திறந்தனர். முழுமையடையாத சட்டப்பேரவையை திறந்தவர்கள் இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்ததை இப்படி கூறுகின்றனர். ராமர் கோயில் திறப்பையும் அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சிவா உள்ளிட்டோர் தயவு செய்து குடியரசு தின விழானை முன்னிட்டு நடத்தப்படும் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம். ஆளுநர் விருந்தை ஆளுநர் விருந்தாக பாருங்கள். அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம்” -என்றார். 

you may also like