Saturday, October 10, 2026

அமெரிக்காவிற்கு எதிரான போரில் வெல்வது நிச்சயம் - வடகொரிய ஜனாதிபதி காட்டம் !


அமெரிக்காவிற்கு எதிரான போரில் வெல்வது நிச்சயம் - வடகொரிய ஜனாதிபதி காட்டம் !

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் தமது நாடு வெற்றிபெறும் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் தெரிவித்துள்ளார்.

கொரியப் போர் நிறுத்த ஆண்டுநிறைவை அனுஷ்டிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளதாக வடகொரியாவின் அரசாங்க ஊடகமான கே.சி.என்.ஏ (KCNA) அந்தத் தகவலை தெரிவித்துள்ளது.

வடகொரியாவை வளமிக்க நாடாக உருவாக்கும் உன்னத இலக்கில் நாடும் நாட்டு மக்களும் வெற்றிபெறுவது நிச்சயம் என்றும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் கௌரவமான முறையில் அந்த வெற்றியை வடகொரியா எட்டும் என்று அவர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like