- by Editor
- 2 years ago
அமிதாப் பச்சன் வைத்தியசாலையில் அனுமதி!
-
- by Editor,
- 2 years ago
- in சினிமா செய்திகள்
நடிகர் அமிதாப் பச்சன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அமிதாப் பச்சன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், மும்பையில் உள்ள கோகிலாபென் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமிதாப் பச்சன் தற்போது 'கல்கி 2898 ஏடி' என்ற படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் சேஷு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேஷு மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் சேஷு விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது நண்பர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.