- by Editor
- 2 years ago
சீரற்ற காலநிலை - ஹட்டன் வலயப் பாடசாலைகள் நாளை விடுமுறை
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை (05) மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான கனமழை மற்றும் நிலவும் பாதகமான வானிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதி தொடர்பான மேலதிக அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.