Saturday, October 10, 2026

அமர்வில் பங்கேற்க கெஹலிய மறுப்பு


இன்று ஆரம்பமான ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர் அமர்வில் பங்கேற்க சிறைச்சாலையிலுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மறுத்துள்ளார்.

தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, நேற்று தனது அமைச்சர் பதவியையும் இராஜிநாமா செய்துள்ளார்.

இந்நிலையில், சிறைக் காவலர்களின் பாதுகாப்புடன் கெஹலிய நாடாளுமன்றம் செல்ல முடியும். ஆனால், அவ்வாறு நாடாளுமன்றம் செல்வதற்கு அவர் மறுத்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல மீது தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததற்கான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.


you may also like