- by Editor
- 2 years ago
கொக்குவிலில் வீதி மின்விளக்குப் பழுது பார்த்த பணியாளர் மின்சாரத் தாகுதலுக்கு இலக்கானார்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்குப் பழுது பார்த்துக்கொண்டிருந்த நல்லூர் பிரதேச சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் நல்லூர் பிரதேச சபையின் ஊழியர் ஒருவர் வீதி மின்விளக்குகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சார தாக்குதலுக்கு உள்ளான ஊழியரை சக ஊழியர்கள் மீட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த நபருக்கு முழங்கை மற்றும் தொடைப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.