- by Editor
- 2 years ago
அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று போராட்டம்
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வாரத்தில் போராட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டமைப்பின் செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைய காலப்பகுதியில் பல்கலைக்கழக கட்டமைப்பில் இருந்து சுமார் 1,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் சுமார் 25,000 ஆக இருந்த நிலையில், தற்போது சுமார் 45,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளமை பல்கலைக்கழகக் கல்வியின் தரம் மற்றும் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.