- by Editor
- 5 months ago
அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி கைது
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்தால் பெறப்பட்ட 6.1 மில்லியன் ரூபாவை தேர்தலுக்கான பிரசாரங்களுக்கு தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரைத் தவிர, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் 6 பேரை குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.