- by Editor
- 2 years ago
அநுரகுமாரவின் அரசாங்கத்திலும் குர்ஆனை விடுவிக்க முடியாதா? என ரிசாட் பதியுதீன் கேள்வி
-
- by Editor,
- 7 months ago
- in இலங்கை செய்திகள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திலும் குர்ஆனை விடுவிக்க முடியதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
''சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் குர்ஆன் பிரதிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இலங்கையில் ஏனைய மத நூல்களுக்கு இல்லாத கட்டுப்பாடுகள், குர்ஆன் மற்றும் அதன் விளக்கவுரைகளுக்கு மட்டும் சுங்கத் துறையால் விதிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாமல் இஸ்லாமிய நூல்களைக் கொண்டு வர முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த கட்டுப்பாடுகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மோசமான உத்தரவாகும்.
இருப்பினும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியில் ஏன் இதை நீக்க முடியாது என வினவ விரும்புகின்றேன்.
துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் குர்ஆன் பிரதிகளை விடுவிக்கக் கோரி 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை .
அத்தகைய பின்னணியில் குர்ஆன் பிரதிகளின் விலை அதிகரித்துள்ளது.'' - என்று தெரிவித்துள்ளார்.