- by Editor
- 8 months ago
அங்கீகாரம் இல்லாத முடிவை மரியாதையாக எதிர்கொண்ட வங்கதேசம்
-
- by Editor,
- 8 months ago
- in விளையாட்டு செய்திகள்
எதிவரும் உலகக் கிண்ணத்தில் வங்கதேசத்தை விலக்கி, அதற்கு பதிலாக ஸ்காட்லாந்தை சேர்க்கும் வகையில் ஐசிசி எடுத்துள்ள முடிவை சவால் செய்யும் எண்ணம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இல்லை என்று கூறப்படுகிறது.
நேற்று (24) டாக்காவில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊடகக் குழுத் தலைவர் அம்சாத் ஹொசைன் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு உலகக் கோப்பையிலிருந்து வங்கதேசத்தை விலக்கும் ஐசிசி முடிவுக்கு எதிராக, வங்கதேச கிரிக்கெட் வாரிய தகராறு தீர்வு குழுவை அணுகப்போகிறது என்ற தகவல்களுக்கு பதிலாக அவர் இதைத் தெரிவித்தார்.
அதன்படி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசியின் முடிவுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என்று ஊடகக் குழுத் தலைவர் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“ஐசிசி வாரியத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற முடியாது என்று ஐசிசி கூறியதால், இந்த நேரத்தில் நாங்கள் இந்தியாவில் சென்று விளையாட முடியாது. எங்கள் நிலைப்பாடு அப்படியே உள்ளது. நாங்கள் தனி நடுவர் மன்றத்தை நாடவோ அல்லது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவோ போவதில்லை.”