Sunday, October 4, 2026

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜர்


பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸாரால் அழைத்துவரப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (03) ஞானசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

ஞானசார தேரருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like