Sunday, October 4, 2026

சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டியவின் மறைவு


இலங்கையின் சிரேஷ்ட கலைஞரும், புகழ்பெற்ற நடன ஆசிரியையுமான தயா நெல்லம்பிட்டிய தனது 91ஆவது வயதில் காலமானார்.

களுபோவிலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் பல முன்னணி பாடசாலைகளில் நீண்டகாலமாக நடன ஆசிரியையாக பணியாற்றிய தயா நெல்லம்பிட்டிய, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கண்டி பாரம்பரிய நடனக் கலையை கற்பித்த சிறந்த ஆசிரியையாகப் போற்றப்பட்டவர்.

பிரபல பாடகர் சேன பொன்சேகாவின் மனைவியான இவர், இலங்கையின் கலைத்துறையில் இன்று முன்னணியில் திகழும் பல மூத்த கலைஞர்களின் ஆரம்பகால ஆசிரியையாகவும் விளங்கியுள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனக் கலையைப் பாதுகாத்து, அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதில் தயா நெல்லம்பிட்டிய ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும்.

அவரது மறைவு இலங்கை கலைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

தயா நெல்லம்பிட்டியவின் இறுதிச் சடங்குகள் நாளை (15) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

you may also like