- by Editor
- 2 years ago
அமெரிக்க வேலைவாய்ப்பு விசா பற்றிய முக்கிய அறிவித்தல்
-
- by Editor,
- 8 months ago
- in இலங்கை செய்திகள்
B1/B2 சுற்றுலா விசாவுடன் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முன் விதிமுறைகளைத் தெளிவாக அறிந்து கொள்ளுமாறு இலங்கைப் பயணிகளுக்கு நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், B1/B2 விசா பெற்றவர்கள் வணிகக் கூட்டங்களில் பங்கேற்பதும், ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடத்துவதும் அனுமதிக்கப்பட்டவை என தெரிவித்துள்ளதுடன், இந்த விசா மூலம் நிரந்தர வேலைவாய்ப்புகளில் ஈடுபட அனுமதி இல்லை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதியில்லாத வேலைவாய்ப்புகளில் ஈடுபடுவோர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடலாம். மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குள் மீண்டும் நுழைவதற்கான நிரந்தரத் தடையும் விதிக்கப்படலாம் என அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
