Sunday, October 11, 2026

G7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர்: கனடா பிரதமரை சந்தித்தார்!


G7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர்: கனடா பிரதமரை சந்தித்தார்!

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக சைப்ரஸ் நாட்டுக்கு கடந்த 15ம் திகதி சென்றார். அங்கு அந்நாடு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி கனடா விற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்துள்ளார்.

அத்துடன், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ளார். இந்நிலையில், கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா நாட்டுக்கு புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .



you may also like