- by Editor
- 2 years ago
70 கிலோ கஞ்சா நேற்று உரும்பிராயில் சிக்கியது
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
உரும்பிராயில் நேற்று விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 70 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போதே இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அந்தக் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாதகலைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரை ஊடாக அது எடுத்து வரப்பட்டதாகக் கூறப்படும் பகுதியிலும் அதிரடிப் படையினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.