- by Editor
- 2 years ago
2027ஆம் ஆண்டுக்கான பாடநூல்கள் அச்சிட அமைச்சரவை அனுமதி
-
- by Editor,
- 9 hours ago
- in இலங்கை செய்திகள்
2027ஆம் கல்வியாண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள பாடநூல்கள் மற்றும் கற்றல் தொகுதிகளை அச்சிடுவதற்கான முதற்கட்ட கொள்முதல் நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 1, 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கான கற்றல் தொகுதிகள் உள்ளிட்ட 421 வகையான பாடநூல்கள் மற்றும் கற்றல் தொகுதிகள் அச்சிடப்படவுள்ளன.
தேசிய போட்டித்தன்மை வாய்ந்த கொள்முதல் நடைமுறையின் கீழ் இதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டிருந்த நிலையில், மொத்தம் 31 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர், உயர்மட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமைய, அச்சிடும் பணிகளை 21 அச்சகங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதற்காக மொத்தம் 1,614.69 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. எனினும், இந்தத் தொகையில் பெறுமதி சேர் வரி (VAT) உள்ளடக்கப்படவில்லை என அமைச்சரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.