Friday, October 9, 2026

19 சூட்டுச் சம்பவங்கள் - 68 பேர் சிக்கினார்கள்!


இலங்கையில் 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 19 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் இன்று கூறினார்.

"பாதாள உலகக் குழுக்களால் 12 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும், தனிப்பட்ட மற்றும் இதரகாரணங்களால்7 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 13 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன." - என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

you may also like