- by Editor
- 2 years ago
1600 போதை மாத்திரைகளுடன் சுதுமலையில் இரண்டு பேர் கைது!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மானிப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன் பொழுது இரு வகையைச் சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர். தொடர்ந்து கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.