Wednesday, October 7, 2026

"தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய்" - நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா


தமிழக அரசியலில் வரலாற்றுச் சம்பவமாக, பெரும்பான்மை ஆதரவை உறுதி செய்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அர்லேகர் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளார்.

இதன்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில் தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

விஜய்யுடன் மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சியமைக்கும் உரிமையை கோரி விஜய் இன்று மாலை தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து ஆதரவு பட்டியலை சமர்ப்பித்திருந்தார். இந்த சந்திப்பில் கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

முன்னதாக, தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநரின் கேரளா பயணம் ரத்து செய்யப்பட்டு விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு வழங்கிய நிலையில், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தது. அதேவேளை, முஸ்லீம் லீக் கட்சியின் ஆதரவுடன் கூட்டணியின் பலம் 120 ஆசனங்களாக உயர்ந்ததாக கூறப்படுகிறது.

இதன் மூலம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பாதை உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

you may also like