Thursday, October 8, 2026

‘ரஜினி 170’ படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன்: வைரலாகும் புகைப்படம்


ரஜினி நடிக்கும் 170 ஆவது படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது 170 ஆவது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். இதில். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரஜினி 170 படத்தின் படப்பிடிப்பின் இடையே ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் அமிதாப் உடனான புகைப்படத்தை பகிர்ந்திருந்த ரஜினிகாந்த், '33 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய வழிகாட்டி, ஆளுமை, அமிதாப் பச்சனுடன், லைகா தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கும் என்னுடைய 170வது படத்தில் மீண்டும் பணிபுரிகிறேன். என்னுடைய இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது' என்று பதிவிட்டிருந்தார்.  

you may also like