- by Editor
- 2 years ago
‘டாக்சிக்’ வெற்றிபெற இன்னும் ரூ.800 கோடி தேவையா?
-
- by Editor,
- 1 month ago
- in சினிமா செய்திகள்
2026ஆம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான ‘டாக்சிக்’, வெளியான 9 நாட்களைக் கடந்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை ரூ.350 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான்-இந்தியா திரைப்படமாக உருவான ‘டாக்சிக்’ படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். யஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ருக்மிணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ‘டாக்சிக்’ கருதப்பட்டது. இப்படம் கடந்த மார்ச் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதன் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
படத்தின் டீசர், கிளிம்ப்ஸ் மற்றும் டிரைலர் வெளியாகியதிலிருந்தே பல்வேறு விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. இருந்தபோதிலும், யஷ் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகமாகவே இருந்தது.
எனினும், படம் வெளியான பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘டாக்சிக்’ முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக படத்தின் வசூல் வெளியான சில நாட்களிலேயே சரிவை சந்தித்ததாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 9 நாட்களில் உலகளவில் சுமார் ரூ.350 கோடி வசூலை ‘டாக்சிக்’ திரைப்படம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக அமைய இன்னும் சுமார் ரூ.800 கோடி வசூலிக்க வேண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய வசூல் நிலவரத்தை பார்க்கும்போது, மீதமுள்ள தொகையை வசூலிப்பது ‘டாக்சிக்’ படத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தெரிகிறது. இதனால், இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.