- by Editor
- 1 year ago
‘ஜனநாயகன்’ இந்த மாதம் வெளியாகுமா? புதிய தகவல் வெளியானது
-
- by Editor,
- 3 months ago
- in சினிமா செய்திகள்
எச். வினோத் இயக்கத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதுவரை திரையரங்குகளுக்கு வரவில்லை. இதற்கிடையில், திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், படத்தின் வெளியீட்டு தேதி குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் அடுத்த மூன்று நாட்களுக்குள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படக்குழு திரைப்படத்தை ஜூலை மாதத்திலேயே வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 16 அல்லது ஜூலை 23 ஆகிய தேதிகளில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதேவேளை, இந்த வாரத்திற்குள் தமிழ்ப் பதிப்பிற்கான தணிக்கைப் பணிகள் நிறைவடையக்கூடும் என்றும், பிற மொழிப் பதிப்புகளுக்கான தணிக்கை நடைமுறைகள் முடிவடைய மேலும் ஒரு வாரம் வரை ஆகக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னரே திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இதுவரை படக்குழுவினர் அல்லது தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.