Saturday, October 10, 2026

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் தொடர்ந்தும் சிகிச்சை


வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

மகா சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு நாளை வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர் என்று சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்படி 8 பேரையும் மன்றின் உத்தரவுக்கமைய வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அழைத்துச் சென்றிருந்தனர்.

இதன்போது மேற்படி 8 பேரினதும் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். 

you may also like