- by Editor
- 1 year ago
வியட்நாமில் சுற்றுலாப் படகு விபத்து - 15 இந்தியர்கள் உயிரிழப்பு
-
- by Editor,
- 2 months ago
- in இந்திய செய்திகள்
வியட்நாமின் பு குவோக் தீவு அருகே இன்று (11) இடம்பெற்ற சுற்றுலாப் படகு விபத்தில் குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோன் மே ரூட் பகுதியிலிருந்து அன் தோய் துறைமுகம் நோக்கி 32 சுற்றுலாப் பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் பயணித்த அதிவேக சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்துள்ளது.
ஹோன் மே ரூட் கோவாய் கடற்கரையிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் படகு மூழ்கியதாகவும், இதனால் அதில் பயணித்த அனைவரும் கடலில் வீசப்பட்டதாகவும் வியட்நாமிய செய்தி இணையதளமான ‘விஎன் எக்ஸ்பிரஸ் இன்டர்நேஷனல்’ தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
“வியட்நாமின் பு குவோக் தீவு அருகே பல இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்த துயரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது” என இந்திய தூதரகம் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
தகவல் பரிமாற்றம் மற்றும் உதவி நடவடிக்கைகளுக்காக ஹோ சி மின் நகரிலுள்ள இந்திய தூதரகத்திலும், ஹனோயிலுள்ள இந்திய தூதரகத்திலும் விசேட கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.