Friday, October 9, 2026

விமானியை தாக்கிய பயணியால் பரபரப்பு!


டில்லி விமானத்தில் பயணித்த பயணியொருவர் விமானியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 110 விமானங்கள் தாமதமாக புறப்பட்ட நிலையில், 79 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோவா செல்லவிருந்த விமானமும் தாமதமாக புறப்பட்டது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட வந்த விமானியை பயணி ஒருவர் தாக்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை விமானத்தில் இருந்த சக பயணியொருவர் காணொளி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அந்த காணொளி பேசுபொருளாகியுள்ளது.

மேலும், விமானத்திலிருந்து அந்த பயணி வெளியேற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


you may also like