- by Editor
- 2 years ago
விபத்தில் உயிரிழந்த சனத்தின் இறுதிக்கிரியைகள் ஞாயிறன்று
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் நடைபெறவுள்ளன.
சிலாபம் - ஆராச்சிக்கட்டுவ ராஜக தலுவ தேவாலயத்தில், அன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காகப் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் நேற்று மாலை 5 மணி முதல் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் பூதவுடல், சிலாபம் - ஆராச்சிக்கட்டுவவில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு இன்று காலை 10 மணியளவில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.