Monday, October 12, 2026

விசாரணை நிறைவு - 2 மணிநேர வாக்குமூலத்தின் பின் இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மஹிந்த


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் இன்று (12) முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.

2013ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, அவர் இன்று காலை 9.30 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பல ஆதரவாளர்கள் ஆணைக்குழு வளாகத்திற்கு வருகை தந்து மஹிந்த ராஜபக்ஷவிற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

you may also like