Saturday, October 10, 2026

வாயிற்கதவை முற்றுகையிட்ட பல்லன்சேன சிறை கைதிகள்


தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இன்று சற்றுமுன்னர் சிறைச்சாலையின் பிரதான வாயிற்கதவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவு பகுதியில் பெருந்திரளான கைதிகள் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக, அதே சிறைச்சாலையில் சில கைதிகள் கட்டிடத்தின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இதனால் அங்கு தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், பெருமளவிலான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கிருந்த சில கைதிகள் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may also like