- by Editor
- 11 months ago
வறட்சியால் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாக சரிவு
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
நாடளாவிய ரீதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச். எம். பி. எஸ். டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நீர்த்தேக்கங்களில் எஞ்சியுள்ள நீரின் அளவு பயிர்ச்செய்கைக்குத் தேவையான அளவிற்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அதிகரித்துள்ள வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாதல் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அன்றாடப் பயன்பாடுகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.