- by Editor
- 1 week ago
ரி 20 அணியில் சேர்க்கப்பட்டுள்ள சமரி மற்றும் வனிந்து!
-
- by Editor,
- 1 year ago
- in விளையாட்டு செய்திகள்
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் மற்றும் மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணிகளின். பெயரிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியிலும் இலங்கையின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இடம்பெற்றுள்ளார்.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்த அணியில் டிராவிஸ் ஹெட், பில் சோல்ட், பாபர் அசாம், நிகொலஸ் பூரண், சிகந்தர் ராஸா, ஹர்திக் பாண்டியா, ராஷிட் கான், வனிந்து ஹசரங்க, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஹர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பெயரிடப்பட்டுள்ள ஆடவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணிகளிலும் இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதற்கமைய, 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் ஒருநாள் அணியின் தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளதுடன், அந்த அணியில் பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், வனிந்து ஹசரங்க ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
அதேநேரம், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இலங்கையைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் இருபதுக்கு 20 அணியில் இலங்கை மகளிர் அணித்தலைவி சமரி அத்தபத்துவும் இடம்பெற்றுள்ளார்.
முன்னதாக, அவர் 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் சர்வதேச அணியிலும் பெயரிடப்பட்டிருந்தார்.